ஶ்ரீலன்கன் எயார்லைன்ஸ் இனை விற்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான அழைப்பு 5வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விற்பனைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து விலைமனுக்களை அழைப்பதற்கான கால அவகாசம் 5வது தடவையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விற்பனைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் விலைமனுக்கள் கோரும் நடவடிக்கை கடந்த டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின், 4 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த காலங்களில் பல தடவைகள் தெரிவிக்கப்பட்டது.
நேற்றும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.