மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மார்ச் 04, 2024 முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையை அடுத்து பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என இன்று ஊடகங்களுக்கு அமைச்சார் கருத்து தெரிவித்தார்.
இதற்காக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் தமது நியமனங்களை முன்பதிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
"டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, மொபைல் பயன்பாடு மற்றும் இணையதளம் சேவைகளைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதற்குப் பயன்படுத்தப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை, வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, மார்ச் 04 ஆம் திகதி முதல் திணைக்களத்தின் சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் நேரத்தையும் திகதியையும் ஒதுக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2 117 116 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் அல்லது www.dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று முன்பதிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.