இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு நிறுவனங்களில், பல்வேறுபட்ட அரச உயர் பதவிகளில் தலைவர்களை உட்கார வைத்த ஒரு ஆசான், படிக்காத மேதை நழீம் ஹாஜியார்.
அல்லாஹ்விடம் அவர் கேட்ட ஒரு துஆ...
"யா அல்லாஹ் என் சமூகத்திற்கு வாரி வழங்குவதற்கு அழியா செல்வத்தையும் அதை வாரி வழங்கும் மனப்பக்குவத்தையும் வழங்குவாயாக, யா அல்லாஹ் செல்வத்தையும் கருமையான மனதையும் தந்து விடாதே றஹ்மானே" என்பதாகும்.
அந்தப் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்தான். அதற்கு இணங்க அல்லாஹ்வின் உதவியை கொண்டு கொடை வள்ளல் நழீம் ஹாஜியார் அவர்களால் நிறுவப்பட்டு, முஸ்லிம் சமூகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட ஜாமியா நளீமியா இன்று சமூகத்தை தாங்கி நிற்கும் ஒரு தூணாக கம்பீரத்துடன் எழுந்து நிற்கின்றது.
அந்த படிக்காத மேதையால் அறிவின் பொறுமதியை கண்டறிந்தது உருவாக்கப்பட்ட ஜாமியா நளீமியா இன்று அதன் 50-வது வருட பொன்விழாவை கொண்டாட விழா கோலம் பூண்டுள்ளது.
இதற்காக பல சமூக முக்கியஸ்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளதோடு, நல்லுள்ளம் கொண்ட சமூக அங்கத்தவர்களையும் அதன் நிர்வாகிகள் இன்று வருக வருக என வரவேற்கின்றனர்.
-பேருவளை ஹில்மி