முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட சிலர் நேற்று (04) மாலை பொரளை மயானத்துக்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.
நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு அவர்கள் சவப்பெட்டியுடன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழுவினர் பொரளை மயானத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை எதிர்த்ததால் இரு குழுக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்து தமது எதிர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.