முன்னாள் ஜனாதிபதியான மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலங்களில் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
எம்பிலிபிட்டிய - மித்தெனிய வீதியில் ஹுலந்த ஓயாவின் குறுக்கே கும்புகொடர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலமே இடிந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இன்று (05) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மரக்கட்டை ஏற்றிச் சென்ற லொரியால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தினால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்ற நிலையில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளதோடு பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த , தங்காலை நோக்கிக் செல்லும் வாகனங்களுக்குக் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் 1985ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம் முறையான பராமரிப்பின்றி வீதியின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டமையினால் இடிந்து விழுந்துள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.