கம்பஹா வீரகுல பிரதேசத்தில் கார் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய சந்தேக நபர் நிட்டபுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட கார் கம்பஹா மேல் யாகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்துடன் மற்றுமொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்ததுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.