மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தனது கணவரின் மரணம் தொடர்பில் செய்த முறைப்பாடு விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, திட்டமிட்ட படுகொலையாக இருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா அல்லது உண்மையில் விபத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது சந்தேகத்திற்குரியது என, மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரங்கல் நிகழ்வின் போது அவர் தெரிவித்தார்.
நிஷாந்தவின் மனைவி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.
சனத் நிஷாந்தவின் மனைவி செய்த முறைப்பாடு விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அது திட்டமிட்ட கொலையாக இருந்தால் குற்றவாளிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.