நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரபல கிரிக்கெட்டர் கேன் வில்லியம்சன்-சாரா ரஹீம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். அவர் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தனது மகளின் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “இப்போது 3வது குழந்தை... அழகான பெண்ணே, இந்த உலகத்துக்கு உன்னை வரவேற்கிறோம். பாதுகாப்பாக பிறந்ததுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்; உன்னுடனான வருங்கால பயணத்துக்கு ஆர்வமாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
2015 முதல் சாரா ரஹும் உடன் வாழ்ந்து வருகிறார் கேன் வில்லியம்சன். கேன் வில்லியம்சனுக்கு 3வயதில் ஒரு பெண்ணும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.