நேற்றைய முன் தினம் ஶ்ரீலங்கன் விமானங்கள் தாமதமானதற்கு நிறுவனத்தின் நிர்வாகக் கோளாறே காரணம் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், அன்றைய தினம் விடுமுறை எடுத்த 13 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
நேற்று முன்தினம் காலை விமான நிலையத்தில் உள்ள செக்-இன் கவுன்டர்களில் தாமதம் ஏற்பட்டதால், இந்தியா, பங்களாதேஷ், மலேசியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்த விமானங்களில் தாமதம் ஏற்பட்டது.
இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட விமான தாமதத்திற்கான காரணத்தை அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை விமானம் ஒன்று பறக்க முடியாமல் விமானத்திற்குள் எலி புகுந்தமையால் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது தெரியவந்தது.
எனினும் அமைச்சரவை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி அமைச்சர் அங்கிருந்து செல்ல தயாராகியத இந்த கூட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.