சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தீவிரவாத கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறப்படும் குழுவொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெய்லி நியூஸ் செய்தியின்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம், விசாரணைப் பிரிவு நேற்று (08) அறிவித்துள்ளது.
பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக ஒருவரோடொருவர் தீவிரவாதக் கருத்துக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதுடன், கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தமது பிரசாரத்தை மேற்கொள்வதாக TID மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை மீட்டெடுக்கும் தருணம் வந்துவிட்டதாக கூறி இவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும் TID நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த தீவிரவாத இணையதளங்களை நடத்துபவர்கள் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசி எண்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக TID மேலும் கூறியுள்ளது.