இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பு. புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆளும் மற்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பூதலுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் பேரழிப்பு. அச்சம் என்பது அறியாதவர். பல சவாலான சந்தர்ப்பத்திலும் முன்னின்று செயற்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என்றார்.