புத்தளம் - வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் கழுத்தில் இறுகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் எனும் 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் நேற்று முன்தினம் (28) இரவு வீட்டில் உள்ள கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது , அங்கு தொங்கிக் கொண்டிருந்த நுளம்பு வலையொன்றின் நூல் பகுதி சிறுவனின் கழுத்தில் இறுக்கியாதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சத்தமில்லாததை அவதானித்த பெற்றோர்கள், வீட்டின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சிறுவன் கழுத்து இறுகி கிடப்பதை பார்த்து உடனடியாக உறவினர்கள், அயலவர்களின் உதவியோடு புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிறுவனைக் கொண்டு சென்றனர்.
எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.