திடீரென செல்வந்தர்களாக மாறிய நபர்களை பொலிஸார் பின்தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய என்னும் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் திடீர் செல்வந்தர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திடீரேன செல்வந்தவர்களாக மாறிய பலரை பொலிஸார் பின்தொடர்வதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஐம்பதாயிரம் சந்தேக நபர்களை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர்களை கைது செய்யும் வரையில் யுக்திய தேடுதல் வேட்டை தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.