நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக கேரட், லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் வியாழக்கிழமை(18) சடுதியாக 1000 ரூபாயாக குறைந்துள்ளது.
அதன்படி வியாழக்கிழமை (18) பேலியகொடை வர்த்தக நிலையத்தில் 1 கிலோ கிராம் கேரட்டின் மொத்த விலை 1000 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஏனைய மரக்கறிகள் தொடர்ந்தும் 500 ரூபாவை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.