இலங்கை துறைமுக அதிகார சபையினால் இரண்டு அகழ்வாராய்ச்சிக் கப்பல்களில் வரி செலுத்துவோரின் செலவில் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இலவசமாக சுற்றுப்பயணம் வழங்கப்பட்டுள்ளது.
25க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த இலவச களிப்பு சவாரியில் இணைந்துள்ளனர், இது இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு (SLPA) கிட்டத்தட்ட ரூ. 5 மில்லியன் செலவாகும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
இருப்பினும், இரண்டு கப்பல்களுக்கான எரிபொருளுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 300, 000 எனவும் இந்த கப்பல்கள் வெளியில் இல்லாமல் துறைமுகப் பகுதிக்குள் மட்டும் சவாரி சென்றதால் எரிபொருளுக்கான கட்டணத்தை மட்டுமே SLPA செலுத்தியது. எனவே செலவு குறைவாக இருந்தது, நம்பகமான SLPA வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) குற்றஞ்சாட்டினார்.
மக்கள் பெரும் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கடலில் பார்ட்டி வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றினார்.