வயது முதிர்வை எதிர்க்கும் ஊட்டச்சத்து மருந்தினை கொழும்பு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
குறித்த மருந்து இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர் சமரகோன் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, மருந்து தயாரிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மருந்து ஒரு பாரம்பரியமுறை படி தயாரிக்கப்பட்டுள்ளமையினால் ஆயுர்வேத திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.