இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47) புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் காலமானார். பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணியின் திடீர் மறைவு இளையராஜா குடும்பத்தார் மற்றும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்வர், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.