வக்பு செய்யப்பட்ட பள்ளிவாசலை அடகு வைக்க வக்பு சபை அனுமதி??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வக்பு செய்யப்பட்ட பள்ளிவாசலை அடகு வைக்க வக்பு சபை அனுமதி??


தெஹிவளையில் அமைந்துள்ள பாபக்கர் பள்ளிவாசலும் அதன் காணியும் அபகரிப்பு சம்பவம் தொடர்பாக இரு வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் முஸ்லிம் சமூகம் அறிந்ததே!


சவுதி அரேபியாவைச் சேர்ந்த பாபக்கர் என்றொரு தனி நபரால் முஸ்லிம் சமூகத்திற்கு வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்ட 50 கோடிகள் பெறுமதி வாய்ந்த பள்ளிவாசல் காணியை ஜமீயதுல் உலமாவின் செயலாலளர்களில் ஒருவர் உற்பட சிலர் அபகரிக்க முற்பட்ட போது, இது  சம்பந்தமாக அப்பகுதி மக்களால் இதை விற்பனை செய்யக்கூடாது, பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட பொதுச் சொத்து என வழக்கு தொடரப்பட்டு இரு வழக்குகள் நடந்து கொண்டிருப்பதை குறிப்பதாக சமூகத் தலைவர்கள் அறிந்தார்களோ என்னவோ.


இதன் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர்கள், இதை தங்கள் விற்பனை செய்வதற்கு எதுவாக பின்வருமாறு குறிப்பிட்டு திருட்டுத்தனமாக ஒரு அறக்கட்டளை (TRUST) எழுதி வைத்திருந்ததை பொதுமக்கள் வெளிப்படுத்தி இருந்தார்கள்.


Trust. No. 1139 (அறக்கட்டளை)

section (5)

THE BORD OF TRUSTEES

SHELL HAVE POWER

Section (F)

To sell, gift, exchange,or mortgage the trust property or any part of parts thereof the proceeds of any such dealing to form part of the trust property or to donate properties prart of the rust property. 


இதை எதிர்த்தே மக்கள் வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.


இறுதியில் இதை ஒரு பொது சொத்து என முடிவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இப்பள்ளி வாசலை பள்ளிவாசலாக பதிவு செய்யும்படி  கடந்த 27.10. 2023 அன்று முஸ்லிம் கலாச்சார அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.


இதை அடுத்து கலாச்சார அமைச்சு மற்றும் வக்பு சபை ஆகியன மிகுந்த வருத்த்துடன் இழுபறிகளுக்கு மத்தியில்  பள்ளிவாசலை வக்பு பொதுச் சொத்தாக பதிவு செய்த போதிலும், நீதிமன்றத்தின் கட்டளையை கருத்தில் கொள்ளாத வகையில், வேறுவகதமாக திருடர்கள்  தப்பிச் செல்லும் ஒரு விதத்தில் கடந்த 29.11.2023 அன்று பள்ளிவாசலையும் அதன் காணியையும் வக்பு சொத்தாக பதிவு செய்தது.


மேலும் இதே தொடர்ந்து கடந்த 05.11.2023 அன்று மீண்டும் இதன் மீது 2207 என இலக்கமிட்டு  முன்னைய அறக்கட்டளை (TRUST) திருத்தி எழுதப்பட்டு இது 06.11.2023 காணிபதிவாளர் பதிவு செய்யப்பட்டு அதே தினம் முஸ்லிம் அமைச்சின் பணிப்பாளருக்கு கையளிக்கப்பட்டு, அதே தினம்  கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் இதை கையொப்பமிட்டு, அதே தினத்தில் இது வக்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, இதற்கு அதே தினமான 06.11.2023 அன்று காலை 10:30 மணியளவில் வக்பு சபை இதை விற்பனை செய்யவும் வட்டிக்கு அடகு வைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.


இதிலும் அதி விசேஷம் என்னவென்றால் பொதுமக்கள் எதை எதிர்த்து, அதாவது, பள்ளிவாசலை விற்பனை செய்ய, அடகு வைக்க, கைமாற்றம் செய்ய, இன்னொருவருக்கு பரிசாக வழங்க என எழுதப்பட்டிருந்த எந்த வாசகங்களுக்கு எதிராக மக்கள் வழக்குத் தொடர்ந்தார்களோ, எந்த வாசங்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோ, அதே வேலையை வக்பு சபை அனுமதியுடன் செய்ய முடியும் என வக்பு சபை அனுமதி அளித்துள்ளது.


புதிய அறக்கட்டளை (TRUST) number 2207


"to sell, transfer, gift, exchange, Or mortgage the trust property or any part's. Therefore the proceeds if any such dealing to form part of the trust property or to donate properties farming part of the trust property subject to the approval of the Wakf bord and/or Tribunal


80 பேச் காணியும் அரக்கட்டளை சொத்தாக எழுதப்பட்டுள்ளதால், பள்ளிவாசலும் இந்த 80 பேச் காணியில் அடங்கு கின்றன. எனவே அறக்கட்டளை என்ற பெயரில் தற்போது பள்ளிவாசல் உள்ள பெரிய 60 பேச் இடத்தையும் விற்பனை செய்துவிட்டு ஒதுக்குப்புறமாக உள்ள 20 பேச் இடத்தை பள்ளி வாசலுக்கு வழங்குவதே இவர்களின் திட்டமாகும்.


எனவே இந்த இடத்தை அபிவிருத்தி செய்ய இதன் ஒரு பகுதியை வக்பு சபையின் அனுமதியுடன்,  அல்லது வக்பு நீதிமன்ற அனுமதியுடன் விற்பனை செய்ய முடியும் என எழுதப்பட்டுள்ளது. 


எனவே இப்பள்ளி வாசலை வட்டிக்கு அடகு வைக்கு ஜமீயதுல் உலமாவின் செயலாளர் உற்பட இதில் அடக்கும் நிர்வாக குழுவுக்கு வக்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.


இவ்விடத்தை பல கோடிகள் செலவு செய்து அபிவிருத்தி செய்ய மக்கள் வரிசை நிற்கும் போது , இதை விற்பனை செய்ய முடியும் என, திருட்டு ஜென்மங்கள் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதன் பின்னணி என்ன ? 


பள்ளிவாசலுக்காக ஒரு சான் நிலம் வாங்க முடியாத காலகட்டத்தில், பள்ளிவாசலைக் கட்ட பள்ளிவாசல் காணியை விற்பனை செய்யும் அளவுக்கு இலங்கை முஸ்லிம்கள் அதிலும் தெஹிவளை வாழ் மக்கள் பிச்சைக்கார சமூகமா?


இதில் அதிசயம் என்னவென்றால், கலாச்சார அமைச்சின் அதிகாரிகளை பொதுமக்கள் சந்தித்து இது பற்றி விளக்கி எடுத்துரைத்த போது, அக்குறிப்பிட்ட அதிகாரிகள், "முஸ்லிம் அறக்கட்டளை விற்பனை செய்யும் விதமாக எழுதப்பட முடியாது. அவ்வாறு எழுதப்படுமாக  இருந்தால் அது ஒரு முஸ்லிம் அறக்கட்டளையாக இருக்க முடியாது. இதை விற்பதற்காக திருட்டுத்தனமாக அறக்கட்டளை செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்வதற்காக நாம் வக்பு நியாய நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கின்றோம்" எனக்கூறி அதற்காக சட்ட ஆலோசகர்களை நியமித்தவர்கள், மாறாக இதை விற்பனை செய்வதற்கு சட்டப்படி அனுமதியை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்வதுதன் பின்னணி என்ன?


வட்டிக்கு அடகு வைக்கவும் விற்பனை செய்யவும் அத்தனை அனுமதிகளும் இரண்டு மணித்தியாலங்களில் வழங்கப்பட்டுள்ளது. பல கோடிகள் பெறுமதியான இப்பள்ளிவாசல் சொத்தை விற்பனை செய்வதற்கு வட்டிக்கு அடகு வைப்பதற்கு  விலை போனவர்கள் யார்? இதில் லஞ்சம் வாங்கியவர்கள் யார்? 


வட்டி, வட்டி சம்பந்தமாக சாட்சி செல்வது, கையொப்பமிடுவது, அதற்கு துனைபோது அத்தனையும் ஹராமானதாகும் என மார்கம் குறிப்பிடும் போது, பள்ளிவாசலை வட்டிக்கு அடகு வைக்க கலிமா மொழிந்த முஸ்லிம் அதிகாரிகள் எவ்வாறு இதற்கு கையொப்பமிட்டார்கள்?


-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.