துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதன் பொருட்டு கட்டுமான வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் தவிர மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சுக்கள் நிதியமைச்சிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.