அண்மையில் வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மஹிந்தானந்த அளுத்கமகேயும் சென்றிருந்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பல அரசியல்வாதிகளும் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சனத் நிஷாந்தவின் பூதவுடல் மக்கள் இறுதி அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று அவரது சொந்த ஊரான புத்தளம் ஆராச்சிக்கட்டுவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) அவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது.