கம்பஹா மாவட்டத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பிக்கு 45 வயதான கலபலுவவே தம்மரதன தேரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டம் மல்வத்துஹிரிபிட்டிய கொட்டாஞ்சேனை விகாரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிக்கு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)