கொழும்பு மருதானை ரயில் நிலையம் கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த ரயில் மார்க்கமாக பயணித்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தெரியவந்ததாவது, இந்திய திரைப்படக் காட்சியொன்று மருதானை ரயில் நிலையத்தில் எடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் பெயர் பலகை கேரளாவில் உள்ள கோழிக்கோடு ரயில் நிலையமாக பெயர் மாற்றப்பட்டு இங்கு கரிக்கோச்சி ரயில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.