நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பெப்ரவரி 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (31) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றநீதியரசர்கள் முன்னிலையில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான சனத் நிஷாந்த தற்போது இறந்துவிட்டதால், அவமதிப்பு மனுக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக எதிர்வரும் 2 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரியலால் சிறிசேன, விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகளினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.