இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் பவுடர் பாக்கெட் ஒன்றில் விலை 30 ரூபாவினாலும், 1 கிலோ பாக்கெட் 75 ரூபாவினாலும் உயரும் என பால் பவுடர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.