கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் நேபாள சர்வதேச விமான நிலையங்களில் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் நிஜ்கத் விமான நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், திரிபுவன், கௌதம புத்தா மற்றும் பொக்ரா சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க எதிர்பார்ப்பதாகவும் நேபாள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் கூறியதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. .
ஒரு வருடத்தில் 1.5 டிரில்லியன் ரூபா செலவில் 1,933 ஹெக்டேர் பரப்பளவில் நிஜ்கத் விமான நிலையத்தை உருவாக்க அதானி குழுமம் நம்புவதாகவும் கூறப்படுகிறது.
அதானி குழுமம் தற்போது இந்தியாவில் 7 விமான நிலையங்களை இயக்குகிறது.