வெலிகமை புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 500 மீடர் தொலைவில் கல்பொக்கவில் அமைந்துள்ள மதரஸா ஒன்றில் 12 வயது மாணனை மிருகத்தனமாக தாக்கிய மெளலவி தலை மறைவாகியுள்ளார்.
இன்று (18) காலை பொலீஸார் இவரைத் தேடிச் சென்றபோது இவர் லீவில் சென்றுள்ளதாக மதரஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது மதரஸாக்களை பாதுகாக்கும் நோக்கமாகக் கொண்டு இது சம்பந்தமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.