2024 ஜனவரி முதலாம் திகதி, முதல் அமுலுக்கு வரும் வகையில், சூதாட்ட உரிமக் கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்சம் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, கசினோ உரிமக் கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் தலா ரூ.10 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்பவர்களுக்கு ரூ. 05 பில்லியன் உரிமக் கட்டணம் மற்றும் ரூ. 10 பில்லியன் புதுப்பித்தல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.