சிறுமி, சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாதுவ பொலிஸில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (உதவி பொலிஸ் அத்தியட்சகர்) நிஷாந்த சேனாரத்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கொஸ்கொட பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்திற்கு கடந்த 11ஆம் திகதி சென்ற போது 7 வயது சிறுவனையும் 13 வயது சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கொஸ்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.