அநுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் மக்களிடம் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதான அந்த நபர் 'ட்ரெட்விங் லிமிடெட்' என்ற சட்டவிரோத பிரமிட் பாணி முதலீட்டு நிறுவனத்தை நடத்தி நடத்தி வந்துள்ளதுடன், பல நபர்களிடம் அதிக வருமானம் தருவதாகக் கூறி பணம் வசூலித்து வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)