கொழும்பு - வெள்ளவத்தை பெட்ரிகா வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒரு கிலோ கொக்கெய்ன் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, போதைப்பொருள் வைத்திருந்த 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் 25 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.