யுவதி ஒருவரை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட கடும் அதிர்ச்சியால் அவர் தற்போது வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நவகத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இந்த யுவதி, தனது பாட்டியுடன் அந்தப் பகுதியில் உள்ள அறை ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று ஆனமடுவ நகருக்கு குறித்த யுவதி தனது தேவைகளுக்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக வந்தபோது சந்தேக நபரை சந்தித்ததாகவும் அந்த நபரை தனக்கு நன்கு தெரியும் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நபர் தன்னை மிகவும் நேசிப்பதாகவும், தான் பேச விரும்புவதாகவும் கூறி தன்னை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குறித்த யுவதி தெரிவித்தார் என பொலிஸார் கூறியுள்ளார்.