கிளிநொச்சி அஹலபுரத்தில் வசிக்கும் 20 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களின் சடலங்கள் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றும், அதிக வேகம் காரணமாக, குறிகாட்டும் கம்பத்துடன் மோதியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கிளிநொச்சி நீதவானின் பரிசோதனையின் பின்னர் சடலங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்