பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஊழல் குற்றச்சாட்டில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
சிறை அதிகாரிகள் கூறுகையில், மற்றொரு சிறப்பு நீதிமன்றம் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக கான் குற்றவாளி என்று அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
முன்னாள் பிரதமர் ஆட்சியில் இருந்தபோது கானும் அவரது மனைவியும் அரச உடமைகளை தக்கவைத்து விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.