முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளருடன் இணைந்து தமது அரசியல் இலாபங்களுக்காக தம்மைக் கைது செய்து 5 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் தனக்கு எதிராகப் பொய்யான அறிக்கைகளை வழங்குமாறு தனது எல்லைக்குட்பட்ட அரச அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததாகவும், இதன் காரணமாக தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
TID பணிப்பாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்து குறித்த நபர்களிடம் இழப்பீடு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.