குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துஷார சஞ்சீவ, குருநாகல் / யாபஹுவ இராச்சிய சகாப்தத்தில் இருந்த, 13 ஆம் நூற்றாண்டின் அரசர் நீதிமன்றத்தை, வீதி அபிவிருத்தித் திட்டத்திற்காக இடித்துத் தரைமட்டமாக்கினார்.
குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உட்பட நால்வருக்கு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) தண்டனை விதித்துள்ளது.
குருநாகலின் முன்னாள் மேயர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் சேர்ந்து 2020 ஜூலையில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்காக கட்டிடத்தை இடித்தார்.
தொல்பொருள் திணைக்களம் அதன் மேற்பார்வையில் இருந்த 13 ஆம் நூற்றாண்டு அரச நீதிமன்றத்தை துஷார சஞ்சீவ இடித்ததாகக் கூறி, குருநாகல் பொலிஸில் அப்போது முறைப்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)