முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
பல முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி செய்ததாக 2019 இல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பில் நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை குறித்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.