விகாரையில் வைத்து 14 வயதுடைய இளம் பிக்கு ஒருவரை பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 49 வயதான தேரர் நேற்று (07) ஒக்கம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மொனராகலை ஒக்கம்பிடிய. படுகொடுவ கந்த விகாரையில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரான பெரிய பிக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் 02 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.