ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
மழையுடன் கூடிய வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.