சாய்ந்தமருது குர்ஆன் மதிராஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா தொடர்பாக மதராஸாவின் நிர்வாகியான மீரா சாய்வு முஹமட் ஜனாஸ் என்பவர் சாய்ந்தமருது பொலிஸாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வௌ்ளிக்கிழமை (08) சாய்ந்தமருது பொலிஸார் மற்றும் அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸார் மதிராஸாவில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சிசிடி கேமரா பொருத்துநர் என பலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பொருத்துநர் மற்றும் 04 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.