புத்தளம் - ஆனமடு பிரதேசத்தில் மகனின் 16 வயது காதலியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஆனமடு பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவராவார்.
சம்பவம் குறித்து தெரிவருவதாது,
18 வயதுடைய மகன் தனது 16 வயது காதலி 18 வயதை பூர்த்தியடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதற்காக தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் காதலி வசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மகன் தாய் கர்ப்பமாக இருந்ததால் சில நாட்களாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது தந்தை தனது மகனது காதலியை பல முறை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் ஆணைமடு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதையதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.