கட்சி மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, பொய்களை பரப்ப முயலும் நபர்களிடத்தில் அமைதியாக காத்திருக்க இனி தேவையில்லை என கூறினார்.
எந்த சக்திகள் வந்தாலும் நாளைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் பலமான சக்தியாக மாறும் எனவும், அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன மிகவும் பலம் வாய்ந்த முகாமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.