அநுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 13 வயது பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த பாடசாலை விளையாட்டு ஆசிரியை எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பாடசாலையில் விளையாட்டு ஆசிரியையாக கடமையாற்றும் 51 வயதுடைய பெண்ணாவார்.
இவர் குறித்த மாணவர்களது பெற்றோர்களிடம் கடந்த 27 ஆம் திகதி அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட விளையாட்டு பயிற்சிக்கு செல்வதாக கூறி மாணவர்களை அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இவர் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பாமல் எப்பாவல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் நபரொருவரிடமிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த விடுதியில் இருந்து ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.