நாட்டில் இன்று (24) தொடக்கம் 26ஆம் திகதி வரை 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நத்தார் தினம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை வெவ்வேறு பணிக்காக பயன்படுத்த உள்ளதால், இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பின்னர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.