தொழிலதிபர் திலினி பிரியமாலி, வாகனம் கொள்வனவு தொடர்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 8 மில்லியன் பெறுமதியான வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதியில்லாமல் வங்கிக் கணக்கிலிருந்து காசோலையை வழங்கியதாக திலினி பிரியமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதியின்றி காசோலையை வழங்கியமைக்காக குற்றவியல் நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாக வர்த்தகப் பெண்ணுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)