கடந்த சில மாதங்களாக சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப் பழத்தின் விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
2500 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது 400 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
எனினும், சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.