சவ்தி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் பாபக்கர் அவர்களால், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக தெஹிவளை பகுதியில் வாங்கி அன்பளிப்புச் செய்யப்பட்ட சுமார் 80 பேசஸ் காணியை ஜமீயத்துல் உலமாவின் செயலாளர்களில் ஒருவர் உட்பட, குறிப்பிட்ட சில உலமாக்கள் கைப்பற்ற முற்படுவதும், இதற்கு எதிராக அப்பகுதி ஜமாத்தார்களால் வழக்குகள் பல வருடங்களாக கொண்டு செல்லப்படுவது சம்பந்தமாக தகவல்கள் அண்மையில் வெளியாகின.
இதனை அடுத்து இதை இவர்களிடமிருந்து பறித்து, பொதுச் சொத்தாக வக்பு செய்யும் முயற்சியை அகில இலங்கை ஜமீயதுல் உலமாவின் உயர்பீட முக்கியஸ்தர்கள் உற்பட சில சமூக முக்கியஸ்தர்களும் கடும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்றை சந்தைப் பெருமதி சுமார் 50 கோடி ரூபாய்கள் மதிக்கப்படும் இக் காணியும், அதில் அமைந்துள்ள பள்ளிவாசலும் வக்பு செய்யப்பட்டதாக சில அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். அத்தோடு அக்குறிப்பிட்டவர்கள் பதிவு சம்பந்தமான இலக்கம் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் உறுதியான நம்பத் தகுந்த ஆதார பூர்வமான பதிவுப் பத்திரங்கள் தம் கையில் கிடைக்கும் வரை தாம் இதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், தொடர்ந்து கொண்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் பல வருடங்களாக பல விதங்களில் தாம் இவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளதால், உறுதியான நிரூபனமான ஆவணங்கள் தம் கையில் கிடைக்கும் வரையில் சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் அவ்வாறு பதிவு செய்யப்பட்டு இருந்தாலும்கூட , ஆவணங்கள் தம்மிடம் கிடைத்த பின்பு, விசேட சட்டத்தரணிகள் மூலம் அனைத்தும் ஆராயப்பட்ட பின்பே வழக்குகள் மீளப் பெறப்படும் பெறப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பள்ளி வாசல் அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால், இப்ப பள்ளிவாசலுக்கு பிற்காலத்தில் அபகரிப்புகள், ஆபத்துக்கள், தனிநபர் அல்லது இயக்கங்களின், குழுக்களின், அதிகாரங்கள் போன்ற புற பாதிப்புகளை ஏற்படுத்தாத விதத்தில் அவை அமைந்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறில்லை எனின்,
நூறு வீதம் சுதந்திரமான பொதுச் சொத்தாக அமையும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம்களின் பெயரால் கடந்த காலங்களில் நடந்த அசம்பாவிதங்கள், மற்றும் வக்பு சொத்து அபகரிப்புகள் போன்றவற்றை கருத்தில் கொண்டே தாம் இம்முடிவுக்கு வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பள்ளிவாசல் அல்ல, இது தனியார் சொத்து என நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி வழங்கி, இவர்களுக்கு உதவி செய்தவர்களை இதற்கு நம்பிக்கை பொறுப்பாளர்களாக நியமிக்க இவர்கள் முற்படுவதாகவும், அதற்கு சில அதிகாரிகள் சிலர் உதவி செய்வதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு அவர்களின் அபகரிப்புக்கு உதவி செய்த நபர்கள் மீண்டும் நம்பிக்கை பொறுப்பாளர்களாக வரும் இடத்து அவர்களை அடிப்படையாக வைத்து மீண்டும் வேறு விதங்களில் அபகரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் இவை பற்றி தான் விழிப்பாக இருப்பதாகவும், கல்லறைக்கு வெள்ளை அடிக்கும் வழிமுறையை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றமானது, சட்டமா அதிபர் காரியாலயம், வக்கபு சபை, மற்றும் வழக்கின் வாதிகளான பொதுமக்கள் தரப்பு ஆகிய மூன்று தரப்பும் ஒரு ஒரு முடிவுக்கு வந்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி உத்தரவு பிரப்பித்துள்ளதாகவும், இக்கோரிக்கையை வக்பு சபை சட்டமா அதிபர் காரியாலயம் ஆகியன நீதிமன்றத்தின் முன்நிலையில் ஒத்துக் கொண்தாகவும், இதற்கு மாறாகவே இவர்கள் அபகரிப்பாளர்களுடன் இனைந்து செயல்பட்டு வருவதாகவும், மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தை இவர்கள் அவமதித்துள்ளதாகவும், அவ்வாறாயின் எதிர்வரும் காலங்களில் இவர்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
( பேருவளை ஹில்மி )