நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழந்தையின் தந்தை தம்பனை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும் 34 வயதுடைய இவர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து நன்கொடையாக வசூலிக்கப்பட்ட 10,900 ரூபா பணத்தொகையையும் பொலிஸார் மீட்டனர்.