விவாகரத்து பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் மூன்று வரைவு முன்மொழிவுகள் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
திருமண காரணங்களுக்கான சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த உத்தேச மாற்றங்கள், தற்போது விவாகரத்து அடிப்படையில் கடுமையான வரம்புகளை விதிக்கும் காலாவதியான சட்டங்களை மறுசீரமைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.