சமூக ஊடகங்களில் தேரர் போல் வேடமணிந்து பொளத்த மதத்திற்கு அவமரியாதை தரும் வகையில் பதிவுகளை பதிவிட்டவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.
இவர் யூடியூப் மற்றும் டிடொக் போன்ற சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு அவமரியாதை தரும் வகையில் பதிவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.