பிலிப்பைன்ஸில் இன்று (03) காலை ஆராதனை நிகழ்வொன்றின்போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மராவி நகரில் உள்ள மின்டானோ மாநில பல்கலைக்கழகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.